📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 27, 2026 11:03 PM

முதியோர் இல்லத்தில் வினோத் காம்ப்ளி: உருக்கமான வீடியோ

முதியோர் இல்லத்தில் வினோத் காம்ப்ளி: உருக்கமான வீடியோ

முதியோர் இல்லத்தில் வினோத் காம்ப்ளி: உருக்கமான வீடியோ

மும்பை: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி(54). 17 டெஸ்ட் (1084 ரன்), 104 ஒருநாள் போட்டியில் (2477) ஆடி உள்ள காம்ப்ளி, 2009ல் ஓய்வு பெற்றார். மது பழக்கத்திற்கு அடிமையான காம்ப்ளி உடல்நிலை பாதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக, யாரையும் உடனடியாக அடையாளம் காண முடியாமல் தவித்தார். தற்போது மும்பை அருகே, தானேவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கிறார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உருக்கமாக பேசி உள்ளார். அதில், “நான் தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். இங்குள்ள வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு தங்கியிருக்கும்போது, ​​நான் வீட்டை விட்டு விலகி இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. இங்குள்ள மக்களிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கிடைக்கிறது” என தெரிவித்துள்ளார்.