📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 21, 2026 02:03 PM

திருப்பதி பிரம்மோற்சவம்.. வாகன வீதிஉலா முன்னால் சிங்கப்பூர், ஜெர்மனி நாட்டு கலைஞர்கள் நடனம்

திருப்பதி பிரம்மோற்சவம்.. வாகன வீதிஉலா முன்னால் சிங்கப்பூர், ஜெர்மனி நாட்டு கலைஞர்கள் நடனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகன வீதிஉலா, இரவு தங்க யானை வாகன வீதிலா நடந்தன. அனுமன் வாகன வீதிஉலா முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன.

சிங்கப்பூர் கலைஞர்கள்

ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி, மராட்டியம், ஒடிசா, பீகார், கர்நாடகா, மணிப்பூர், காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்கள், தங்கள் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் மூலம் அந்தந்தப் பகுதிகளின் கலாசாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி அசத்தினர். நேர்த்தியான நடன நிகழ்ச்சிகளும், இசைக்கருவி வாசிப்புகளும் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.