📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 08:03 PM

திமுக வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு

திமுக வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு

நிர்மல்குமார் | ஆதவ் அர்ஜுனா

சென்னை: ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் ஜி.கே.முத்துகுமார் அமர்வில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையீடு செய்தார்.

அப்போது நீதிபதிகள், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கயிருக்க வேண்டும். அவ்வாறு நோட்டீஸ் வழங்காமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

எனவே வழக்கை எண்ணிட வேண்டாம் என பதிவுத்துறைக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தனர்.

அப்போது, துரைமுருகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அதுவரை அந்த மனுவை எண்ணிடும்படி பதிவுத் துறைக்கு வலியுறுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அந்த உத்தரவாத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கை அக்டோபர் 13-ம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.