📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 18, 2026 06:03 PM

டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட அனுமதி

டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட அனுமதி

புதுடெல்லி: டெல்லி ராம் லீலா மைதானத்தில் போரட்டம் நடத்த காங்கிரஸுக்கு காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.

டெல்லியின் ஜந்தர் மந்தர் இனி அங்கீகரிக்கப்பட்ட போராட்டக் களமாக இருக்காது என்று அறிவித்த டெல்லி காவல் துறை, அதற்கு மாற்றாக ராம்லீலா, புராரி, சிபிடி ஆகிய மைதானங்களை போராட்டக்களங்களாக அறிவித்துள்ளது.

இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நவம்பர் 1-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸின் இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை தற்போது முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது. அக்கட்சி விடுத்த கோரிக்கையின் பேரில், போராட்டத்துக்கு அனுமதி வழங்கியதுடன், தடையில்லா சான்றிதழையும் வழங்கியதாக காவல் துறை தெரிவித்துள்ளது.