📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 18, 2026 07:03 PM

சபரிமலையில் பக்தர்களுக்கு திருப்பதி போன்ற வசதிகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு திருப்பதி போன்ற வசதிகள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலைப் போன்று பக்தர்களுக்கான நவீன வசதிகளை ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேரள முதல்வர் வி.டி.சதீசன் சபரிமலைக்கு நேரடியாகச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ள புகழ்பெற்ற மண்டல மகரவிளக்கு யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்துத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பான, அமைதியான வழிபாட்டை உறுதி செய்வது மாநில அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலக்கெடுவுக்குள் அனைத்துப் பொதுப்பணிகளையும் முடித்தல், கழிவு மேலாண்மைக்கான திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட விரிவான பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய வழிபாட்டுக் காலம் முடிந்த பிறகு, சபரிமலையை நாட்டின் சிறந்த ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக மாற்றும் நோக்கில், திருப்பதி கோவில் மாதிரியைப் பின்பற்றி பக்தர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.