Latest News
October 12, 2026 11:03 AM
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாசனத்திற்கு திறந்து விடப் படும் தண்ணீரின் அளவானது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கும் கீழே குறைந்து விட்டது. நீர்மட்டமும் நேற்று மாலையில் 63 அடியாக சரிந்து விட்டது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
Latest News