📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news October 06, 2026 09:03 PM

ரயில் நிலையத் தளமேடையிலிருந்து பையை வீசிய இளையரிடம் விசாரணை

ரயில் நிலையத் தளமேடையிலிருந்து பையை வீசிய இளையரிடம் விசாரணை

பனிக்கூழ் கொண்டுள்ள பை ஒன்றை வீசி, அவசரப்பட்டு ஆபத்தான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 17 வயது இளையர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பொங்கோல் பகுதியில் உள்ள ‘கோவ்’ எல்ஆர்டி ரயில் நிலையத்தில் அவர் தளமேடையிலிருந்து அந்தப் பையை வீசியதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 27ஆம் தேதி இரவு கிட்டத்தட்ட 11 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி இரண்டு நாள்களுக்குப் பிறகு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவலத்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு ரயில் சேவைகள் இயங்கிக்கொண்டிருந்தன.

ரயில் தடத்திற்கான கடைசி ரயில் நள்ளிரவு 12.38 மணிக்கு பொங்கோல் நகர மையத்திலிருந்து புறப்படும் என்று அதை இயக்கும் ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ நிறுவனத்தின் இணையதளத் தகவல் காட்டுகிறது.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் வாயிலாக அந்த 17 வயதுச் சிறுவன் அடையாளம் காணப்பட்டான்.

அவசரப்பட்டு ஆபத்தான முறையில் நடந்துகொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த இளையருக்கு ஆறு மாதம் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் எனக் காவலத்துறை கூறியது.

பயணக்கட்டணம் செலுத்தாது குற்றமாகும்

இது குறித்து ஊடகங்களுக்குப் பதிலளித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிரேஸ் வூ, கண்காணிப்பு கேமரா பதிவுகளின்படி அந்த இளையர், ஐந்து பேர் கொண்ட கும்பலில் ஒருவனாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அந்த இளையர்களில் நால்வர், ரயில் நிலையத்திற்குள் நுழையும்போது நுழைவாயிலில் தங்களது பயண அட்டையைப் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.

“ பயணக்கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றும் செயலாக இது உள்ளது. குற்றச் செயலான இதனை நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று திருவாட்டி கிரேஸ் குறிப்பிட்டார்.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்றில், கருப்பு நிறக் கைச்சட்டைச் சட்டையும் கருப்பு நிறக் காற்சட்டையும் அணிந்த ஒரு நபர், ரயில் நடைமேடையின் தரையில் ஒரு பையை அடிப்பது காணப்படுகிறது.

பின்னர், அந்த நபர் பையைக் கையில் எடுத்து, தடுப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி வழியே தண்டவாளத்தைத் தாண்டி தூக்கி வீசுகிறார்.

அதன்பின், நால்வர் மூன்று தெர்மோகோல் பெட்டிகளை இழுத்துச் செல்லும் காட்சியுடன் அந்தக் காணொளி முடிகிறது.