📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 04:03 AM

ராகுல்காந்தி கூட்டத்தில் மாணவர்கள் வெளியே செல்லாமல் போலீசை வைத்து தடுப்பதா? பா.ஜனதா கண்டனம்

ராகுல்காந்தி கூட்டத்தில் மாணவர்கள் வெளியே செல்லாமல் போலீசை வைத்து தடுப்பதா? பா.ஜனதா கண்டனம்

சென்னை தீவுத்திடலில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். இதற்காக 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் திரட்டப்பட்டனர்.

ராகுல்காந்தி பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் மாணவர்கள் பலர் எழுந்து சென்றனர். அவர்களை போலீஸ் மூலம் தடுத்து அமரும்படி நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு என்ற பெயரிலான அரசியல் மேடையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் கற்பனையான குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசியுள்ளார். தமிழக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் ராகுல் காந்தியின் ஒவ்வொரு பொய் பிரசாரத்திற்கும் வரலாற்று உண்மைகளும் புள்ளிவிவரங்களுமே தகுந்த பதிலடியாக அமையும்.

நீட் விவகாரம்

நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி பேசுவது அப்பட்டமான அரசியல் போலித்தனம். தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் 2010-ல் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவரின் மனைவிதான் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார்.

அன்று நீட்டை அறிமுகப்படுத்திவிட்டு, இன்று அதற்கு எதிராகப் பேசி கையெழுத்திடுவது ராகுல் காந்தியின் அப்பட்டமான இரட்டை வேடம்! அதேநேரம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால், இன்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகி வருகின்றனர்.

ஜனநாயகம் பற்றிப் பேச எந்தத் தார்மீக உரிமையும் இல்லை

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன் கண்டனம்

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முயன்றபோது, காங்கிரசார் காவல்துறையினர் மூலம் அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியே செல்லவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியவை.

மாணவர்களின் குரலைக் கேட்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவது தான் காங்கிரஸ் கட்சியினருக்கு தெரிந்த ஜனநாயகமா? மாணவர்களுடன் கலந்து ரையாடுவதாகக் கூறும் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிக்க வேண்டிய பொறுப்பு இல்லை என்பதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது.

முழு உரிமை உண்டு

மாணவர்கள் என்பவர்கள் அரசியல் தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தவும், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், விரும்பினால் அதிலிருந்து வெளியேறவும் முழு உரிமை கொண்டவர்கள்.

அதை விடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்துவது ஜனநாயக மாண்புகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது.

மாணவர்களின் நலனுக்காகப் பேசுவதாகக் கூறும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும், முதலில் மாணவர்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் குரலை ஒடுக்கிவிட்டு, அவர்களுக்காகப் பேசுவதாக அரசியல் நாடகம் நடத்த முடியாது. அவர்கள் எந்த அச்சுறுத்தல்களுக்கோ, கட்டாயப்படுத்துதல்க ளுக்கோ ஒருபோதும் அடி பணியமாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.