📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 18, 2026 07:03 AM

ராகுல் செயலால் காங்கிரஸ் கட்சியினர் வருத்தம்!

ராகுல் செயலால் காங்கிரஸ் கட்சியினர் வருத்தம்!

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள், டில்லியில் வலுத்து வருகின்றன. கரப்பான் கட்சியினர் எங்கே தங்களை முந்தி விடுவரோ என்ற பயத்தில், காங்கிரசும் போராட்டங்களில் இறங்கியுள்ளது. போராட்டத்தில், திடீரென பெண் ஒருவரை முன்னிறுத்தி அவரை பேச வைத்தார் ராகுல்.

அவர் பெயர் நேஹா போரா, 29. இவர், இடதுசாரி மாணவர் அமைப்பான, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர். இது, காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

'இளைஞர்களை முன்னிறுத்தி பேச வைக்க வேண்டும் என்றால், நம் கட்சியில் எத்தனையோ பேர் உள்ளனர்... அவர்களை விடுத்து, நக்சல் குணம் கொண்ட இந்த பெண்ணை ஏன் பேச வைத்தார் ராகுல்... இவர் நம்ம கட்சியில் கூட இல்லையே' என, நொந்து போய் சொல்கின்றனர்.

இதற்கு ஒரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். நேஹா போராவை போலவே இடதுசாரி போராளியாக இருந்தவர், பீஹாரைச் சேர்ந்த கண்ணையா குமார். இவரின் போராட்ட குணத்தை பார்த்து, 2021ல் காங்கிரசில் இணைய வைத்தார் ராகுல். 2024 லோக்சபா தேர்தலில், வடகிழக்கு டில்லி தொகுதியில் காங்., வேட்பாளராக களமிறங்கினார். இவருக்கு, 'சீட்' கொடுக்கக் கூடாது என, டில்லி காங்., தலைவர் வற்புறுத்தியும் ராகுல் கேட்கவே இல்லை. விளைவு,- பா.ஜ., வேட்பாளரிடம், 1.30 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் ராகுல் உள்ளாரே என, வருத்தப்படுகின்றனர் மூத்த தலைவர்கள்.