புதிய தலைமை செயலகம் விரைவில் திட்ட அறிக்கை
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட, விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளன.
புதிய தலைமைச் செயலகம் கட்ட, சென்னை, பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், 25.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு, 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், தலைமைச்செயலகம் மற்றும் சட்டசபை கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கானப் பணிகள் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயல கம் கட்ட, மீனவ அமைப்பு கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், புதிய தலைமைச் செயலகத்தை, அங்கு கட்டி முடிப்பதில், முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டுமான பணிக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணியை, பொதுப்பணித் துறை தொடங்க உள்ளது.
சென்னை மண்டல பொதுப்பணித்துறை கீழ் இயங்கும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, இப்பிரிவில் நீண்டகாலமாக காலியாக இருந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
கட்டட வடிவமைப்பை உருவாக்கும், கட்டட கலை நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.
முதல்வர் விஜய் திட்ட மிட்டபடி, ஒன்றரை ஆண்டு களில், புதிய தலைமைச் செயலகத்தை பயன்பாட் டிற்கு கொண்டு வர, அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள் ளன.