📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 17, 2026 04:00 PM

பறிமுதல் செய்யப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நசுக்கிய ஆணையம்

பறிமுதல் செய்யப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நசுக்கிய ஆணையம்

நிலப் போக்குவரத்து ஆணையம், பறிமுதல் செய்யப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நசுக்கியதோடு கடுமையாக எச்சரித்துள்ளது.

விதிமுறைக்கு உட்படாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று அது கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தனிநபர் நடமாட்டச் சாதனங்களை கனமான இரும்பு உருளையால் நசுக்கும் காணொளியை ஆணையம் பகிர்ந்துகொண்டது.

டிக்டாக்கில் பதிவிட்டுள்ள அந்தக் காணொளியில், விதிமுறைகளுக்குப் புறம்பான தனிநபர் நடமாட்டச் சாதனங்களைச் செயலிழக்கச் செய்த பிறகு அவற்றுக்கு என்ன நேர்கிறது என்பதைக் காண்பித்து அவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ஆணையம் எச்சரித்தது.

“இன்னமும் நமது பாதைகளில் வரம்புகள் இன்றி செல்கிறீர்களா, அந்தக் காலம் முடிந்துவிட்டது. உங்கள் சாதனத்தின் வரம்பை அறிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் உங்களுடைய விதிமுறை மீறிய தனிநபர் நடமாட்டச் சாதனம் இங்குதான் வந்து சேரும்,” என்று அந்தப் பதிவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பதிவிடப்பட்ட முந்தைய காணொளியில், ஒவ்வொரு சாதனத்தின் பாகங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் பொருள்கள் முறையாக அகற்றப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் விளக்கியிருந்தது.

உதாரணமாக, மின்கலம் போன்றவை பாதுகாப்பாக அகற்றப்பட்டு, அவற்றின் ஆற்றலை வெளியேற்றுவதற்காக உப்பு நீரில் வைக்கப்படுகிறது. இதன் மூலம் மின்கலத்திலிருந்து ஆற்றல் வேகமாக வெளியேற்றப்படுகிறது. அதேவேளையில், அந்தச் சாதனங்களில் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு வகையான உலோகங்கள் பிரிக்கப்பட்டு, இணைப்புக் கேபிள்கள் அகற்றப்படுகின்றன. இந்தச் செயல்பாட்டின்போது, ரப்பர் பாகங்கள், பிளாஸ்டிக், பிற கழிவுப் பொருள்கள் அகற்றப்படுகின்றன.

அதன் பிறகு, அந்தச் சாதனங்களின் உலோகச் சட்டங்கள் நசுக்கப்படுவதற்கு அனுப்பப்படுகின்றன என்று ஆணையம் மேலும் தெரிவித்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது அதிகாரிகளால் மொத்தம் 503 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 70 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.