போஸ்ட் ஆபிஸ் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு :தற்காலிக ஊழியர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் ?போனஸ் ஃபார்முலா கணக்கீடு
தீபாவளி பண்டிகை காலங்களில் ஊழியர்கள் அனைவரும் போனஸ் அறிவிப்பை எதிர்பார்த்து தான் ஆவலாக காத்துகொண்டு இருப்பார்கள். அந்த வகையில் தான் இந்திய அஞ்சல்துறை ஊழியர்களும் தீபாவளி போனஸ் அறிவிப்பை எதிர்நோக்கி இருந்தனர். அவ்வாறு போனஸ் அறிவிப்பிற்காக காத்துகொண்டு இருந்த ஊழியர்களுக்கு இந்திய அஞ்சல் துறை நற்செய்தியை வழங்கியிருக்கின்றது. அதாவது போஸ்ட் ஆபிஸ் தங்களது ஊழியர்களுக்கு 60 நாட்கள் Productivity Linked Bonus - PLB வழங்குவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.இந்த அறிவிப்பு போஸ்ட் ஆபிஸ் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் இந்த போனஸ் அறிவிப்பு யாருக்கெல்லாம் பொருந்தும், தற்காலிக ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் ? போனஸ் கணக்கிடும் பார்முலா என்ன ?என்பது குறித்து விரிவாக தற்போது காணலாம்போனஸ் பெரும் தகுதியான ஊழியர்கள்MTS ,க்ரூப் C ஊழியர்கள் ,Non-Gazetted Group B போன்ற நிரந்தர ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் ஆகியோர் இந்த போனஸ் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்போனஸ் விதிகள்1.ஏப்ரல் 1 2025 முதல் மார்ச் 31 2026 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்கள், ராஜினாமா மற்றும் வேறு துறைக்கு மாறிய ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப போனஸ் வழங்கப்படும்2.இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அஞ்சல்துறை 1988 ஆம் ஆண்டு விதிகளின்படி போனஸ் என்பது தீர்மானம் செய்யப்படும்3.க்ரூப் C யில் இருந்து பதவி உயர்வு பெற்று க்ரூப் B க்கு மாறிய ஊழியர்களுக்கு க்ரூப் C பிரிவில் பணியாற்றிய நாட்களுக்கான போனஸ் பெற தகுதியானவர்கள்போனஸ் கணக்கீடு பார்முலாபோஸ்ட் ஆபிஸ் வழங்கும் போனஸ் என்பது ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடப்படுவதில்லை. எனவே போனஸ் என்பது இந்த பார்முலா மூலம் தான் அஞ்சல்துறையில் கணக்கிடப்படுகிறதுமாத சம்பளம் ( அதிகபட்சம் 7000 ) X போனஸ் /30.4அதாவது 7000 X 60 /30.4 =13,816 ரூபாய் போனஸ் தொகையாக கிடைக்கும்தற்காலிக ஊழியர்கள் விதிகள்தற்காலிக ஊழியர்களாக இருந்தால் அவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அதுவும் ஆண்டிற்கு 240 நாட்கள் அவர்கள் வேலை செய்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் போனஸ் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்தற்காலிக ஊழியர்களுக்கு மாத சம்பள வரம்பு 1200 என கணக்கிடப்பட்டால் 60 நாட்களுக்கு கிட்டத்தட்ட 2400 ரூபாய் போனஸ் தொகையாக கிடைக்கும்