📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 09, 2026 01:04 PM

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல்காந்தி மீதான சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல்காந்தி மீதான சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல்காந்தி மீதான சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல்காந்தி, 2018-ம் ஆண்டு செப்டம்பரில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும், சமூகவலைத்தள பக்கத்திலும் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக பா.ஜனதாவை சேர்ந்த எம்.எச். ஸ்ரீ ஸ்ரீமால் கவாட் என்பவர் மும்பை கிர்காவ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த கருத்து தனிநபர் மீதானது என்பதால், புகார் அளித்தவர் பாதிக்கப் பட்ட நபர் அல்ல என்றும், எனவே இந்த வழக்கை தொடர அவருக்கு உரிமை இல்லை என்றும் ராகுல்காந்தி தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி பா.ஜனதாவின் முகமாக இருப்பதாலும், புகார்தாரர் பா.ஜன தாவின் தீவிர உறுப்பினர் என்பதாலும் ராகுல்காந்தியின் மனுவை மாஜிஸ் திரேட்டு ஏற்கவில்லை. மேலும் ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்ப மாஜிஸ்தி ரேட்டு உத்தரவிட்டார்.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல்காந்தி மும்பை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆர்.போர்கர், மாஜிஸ்திரேட்டு உத்தரவில் எந்த சட்டவிரோதத்தையும் கண்டறிய முடிய வில்லை என்று கூறினார். எனவே ராகுல்காந்திக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

அதே வேளையில், ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வ தற்காக, கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்த டையை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்து ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட் டார்.