📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 15, 2026 01:31 AM

PF உறுப்பினர்களுக்கு நற்செய்தி : EPFO வின் புதிய வாட்ஸ்அப் சேவை பயன்பாட்டு வழிகாட்டி

PF உறுப்பினர்களுக்கு நற்செய்தி : EPFO வின் புதிய வாட்ஸ்அப் சேவை பயன்பாட்டு வழிகாட்டி

மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தங்களின் PF கணக்கு விவரங்களையும் கிளைம் நிலையை சரிபார்ப்பதும் சற்று கடினமான விஷயமாக இருந்து வந்தது. UAN இணையதளத்தில் சர்வர் முடக்கம், பாஸ்வர்ட் மறந்துபோவது என பல சிக்கல்கள் இருந்து வந்தது. இதனால் PF உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கெல்லாம் ஒரு விடுவிக்கலாம் பிறக்கும் வகையில் EPFO தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது தற்போது PF உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் கணக்கு விவரங்களை ஸ்மார்ட்போன் மூலமே தெரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு வாட்ஸ்அப் சேவையை தான் EPFO அறிமுகம் செய்துள்ளதுவாட்ஸ்அப் சேவை பயன்பாடுEPFO வின் இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் நாம் எந்த ஒரு இணையதளத்திற்கு செல்ல தேவையில்லை. உங்கள் மொபைல் மூலமே தகவல்களை பெறலாம். EPFO வாட்ஸ்அப் சேவை மூலம் நாம் பெறப்போகும் தகவல்கள் பின்வருமாறு1.உங்களது PF கணக்கின் பேலன்ஸை சரிபார்த்து கொள்ளலாம்2.உங்களுடைய நிறுவனம் செலுத்திய கடைசி ஐந்து பங்களிப்பை சரிபார்க்கலாம்3.பென்ஷன் வாங்குவோருக்கான ஆயுள் சான்றிதழ் மற்றும் PPO தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்வாட்ஸ்அப் சேவையில் PF பேலன்ஸ் பார்க்கும் முறை1.முதலில் உங்களுடைய மொபைலில் EPFO வின் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் எண்ணை சேமிக்கவும்2.UAN கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் மூலம் hi மெசேஜ் அனுப்பவும்3.திரையில் தோன்றும் மெனுவில் உங்களுக்கு தேவையான சேவையை தேர்ந்தெடுக்கவும்4.உங்களுடைய UAN நம்பரை உள்ளிட்டு மொபைலுக்கு வரும் OTP மூலம் சரிபார்க்கவும். திரையில் சில வினாடிகளில் உங்களுடைய PFவிவரங்கள் தோன்றும்இவ்வாறு இனி PF கணக்கு விவரங்களை நாம் வாட்ஸ்அப் சேவை மூலமே சரிபார்த்து கொள்ளலாம். இதன் மூலம் PF தகவல்களை அறிந்துகொள்ள அலைய தேவை இல்லை. முன்பெல்லாம் சர்வர் கோளாறு காரணமாக உறுப்பினர்கள் தங்களுடைய PF தகவல்களை அறிந்துகொள்ள கடினமாக இருந்தது. ஆனால் தற்போது epfo அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் சேவை காரணமாக அனைத்தும் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சேவை கண்டிப்பாக கோடிக்கணக்கான PF உறுப்பினர்களுக்கு நற்செய்தியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை