Irumudi OTT: தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? ரவி தேஜாவின் 'இருமுடி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: தெலுங்கு சினிமாவில் மாஸ் நடிகரான ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ஆகஸ்ட் 21ந் தேதி தியேட்டரில் வெளியான படம் தான் இருமுடி. ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில், தற்போது இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
விறுவிறுப்பான கதை: பொல்லூர் எனும் ஊரில் மனைவி காவேரி மற்றும் மகள் மணிகண்டாவுடன் வாழ்ந்து வருகிறார் ரவி தேஜா. அவர்கள் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் தைரியசாலியாக இருக்கிறார். இந்த நேரத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பல இடையூறுகள் நிகழ்கின்றன. ரவி தேஜாவின் மகள் மணிகண்டா, அவளின் தோழி காயத்ரி தனலட்சுமி டீச்சரின் வகுப்பிற்கு சென்ற பிறகு அங்கு நடக்கும் சில விஷயத்தை கவனிக்கிறார்கள். அது என்ன என்ற ரகசியத்தை ஆராயும் போது, தனலட்சுமியும் புஜ்ஜி ராஜூவும் சேர்ந்து மாணவிகளை தவறாக பயன்படுத்தி, மிரட்டி வருவது தெரியவருகிறது.
பழிவாங்கும் கதை: இந்த உண்மையை வெளியே சொல்ல முனையும் போது, மணிகண்டா மர்மமான முறையில் காணாமல் போகிறாள். தன் மகள் தனக்கு ரகசியமாக அனுப்பிய ஆடியோ மெசேஜ் மூலம் உண்மையை கண்டுபிடிக்கும் ரவி தேஜா. இந்த குற்றத்திற்கு பின்னால் இருக்கும் கிரிமினல்களையும் அதற்கு உடந்தையாக இருந்த நண்பனையும் எப்படி பழிவாங்கி, தன் மகளுக்கு நியாயம் சேர்க்கிறார் என்பதே 'இருமுடி' படத்தின் கதை. நட்சத்திர பட்டாளம்: ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ஸ்வாசிகா, ரமேஷ் இந்திரா என பலர் நடித்த இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ஓடிடியில் பாருங்க: திரையரங்குகளில் இத்திரைப்படத்தைத் தவறவிட்டவர்களுக்காகக் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) 'இருமுடி' படத்தை வெளியிடவுள்ளது. வரும் செப்டம்பர் 18, 2026 முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.'இருமுடி' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ரவி தேஜா அடுத்ததாக ஹசித் கோலி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் சங்கராந்தி 2027 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ' சனிவாரம்' புகழ் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிக்க உள்ளார்