📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 03, 2026 05:01 AM

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

ஓய்வூதிய நிதி வணிகத்தில் நுழைந்தது 'பேங்க் ஆப் பரோடா'

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து, ஓய்வூதிய நிதியை கையாளுவதற்கான உரிய சான்றிதழை பெற்ற பிறகு, பேங்க் ஆப் பரோடா அதிகாரப்பூர்வமாக, ஓய்வூதிய நிதி வணிகத்தில் நுழைந்துள்ளது. இதன் வாயிலாக இந்த துறையில் களமிறங்கும் இரண்டாவது பொதுத்துறை வங்கி என்ற நிலையையும் எட்டியுள்ளது.

உலக திறன் மையத்தை கையகப்படுத்தும் டி.சி.எஸ்.,

அமெரிக்காவை சேர்ந்த நுகர்வோர் மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் 'பெஸ்ட் பை-' நிறுவனத்தின் இந்தியாவிலுள்ள உலகளாவிய திறன் மையத்தை, டி.சி.எஸ்., கையகப்படுத்த உள்ளது. இந்த மையத்தை செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய திறன் மையமாக மாற்றபோவதாக டி.சி.எஸ்., அறிவித்துள்ளது.

'சுசூகி மோட்டார்' நிறுவனம் தரத்தை தக்கவைக்க முயற்சி

சுசூகி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் உள்ள தன் உதிரிபாகம் வழங்கும் நிறுவனங்களிடம், இயந்திர பராமரிப்புக்காக வாரத்தில் ஒரு நாள் உற்பத்தியை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்கும் வேளையில், கார்களின் தரத்தை பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாக்பூரில் 'எம்பிரேர்' விமான ஒருங்கிணைப்பு ஆலை

ராணுவ போக்குவரத்து விமானமான 'சி-390 மில்லேனிய'த்தின் தயாரிப்பு ஆலையை மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அமைக்க மஹிந்திரா குழுமமும், பிரேசிலின் 'எம்பிரேர்' நிறுவனமும் முடிவெடுத்துள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இதனால் உள்நாட்டில் ராணுவ விமான தயாரிப்பு திறன் மேம்படும்.

'அலுசெம்' கையகப்படுத்தலை கைவிட்டது 'ஹிண்டால்கோ'

ஆதித்ய பிர்லா குழுமத்தை சேர்ந்த 'ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்', அமெரிக்காவின் 'அலுசெம்' நிறுவனத்தை 1,188 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டுள்ளது. ஒப்பந்தத்தை நிறைவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் இத்திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.