📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 28, 2026 02:00 PM

முழுமையற்ற தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் 15,000 கிராப் ஓட்டுநர்களுக்கு அதிக வரி, சிங்க‌ப்பூர் செய்திகள்

முழுமையற்ற தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் 15,000 கிராப் ஓட்டுநர்களுக்கு அதிக வரி, சிங்க‌ப்பூர் செய்திகள்

கிராப் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் முழுமையற்ற வருமானத் தகவல்களைச் சமர்ப்பித்ததால் ஏறக்குறைய 16,000 தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு திங்கட்கிழமை (செப்டம்பர் 28) பதிலளித்த ஆணையம், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு $100க்கும் குறைவான கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் இருப்பினும் ஓட்டுநரின் வரி விலக்கு உரிமைகள், வருமான வரி வரம்பைப் பொறுத்து உண்மையான தொகை மாறுபடும் என்றும் தெரிவித்தது.

2026ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான முன்-தாக்கல் வருமானத் திட்டத்தில் இணைந்த ஏறக்குறைய 28,000 ஓட்டுநர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜூலை இறுதியில் கிராப் நிறுவனம் தங்களுக்குத் தெரிவித்ததாக ஆணையம் கூறியது.

இந்த ஓட்டுநர்களின் வருமானம் வரிப் பதிவுகளில் குறைத்துக் காட்டப்பட்டிருந்ததாகவும் அது மேலும் தெரிவித்தது,

இதற்கிடையே தனது இணையத்தளத்தில் ஓட்டுநர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், கணினி கட்டடைப்பு கோளாறு காரணமாக ஊக்குவிப்புத் தொகைகள், டிப்ஸ் உட்பட வழங்க வேண்டிய தொகைகள் விடுபட்டுவிட்டதாக கிராப் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) ஊடகங்களுக்குப் பதிலளித்த கிராப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், தரவு சமர்ப்பிப்பு முறையை மறுஆய்வு செய்ய ஆணையத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்கும் அபாயத்தைக் குறைக்க கிராப் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அமல்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட முன்-தாக்கல் வருமானத் திட்டத்தின் மூலம், கிராப் கார் ஓட்டுநர்கள் தங்களின் வருமானப் படிவத்தைத் தானாகவே பூர்த்தி செய்யும் வசதியைப் பெற்றுள்ளனர்.