மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து அணைகள் நிரம்பும் தருவாயில் இருந்ததால் அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
வெளியே தெரியும் புராதன சினனங்கள்
இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் அணை கட்டியபோது மூழ்கிய புராதன சின்னங்கள் தற்போது வெளியே தெரிய தொடங்கியது. அதன்படி பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மூழ்கியிருந்த நந்தி சிலை தற்போது முழுவதுமாக வெளியே தெரிகிறது. இதனால் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் அணையின் நீர்த்தேக்க பகுதியில் தெரியும் நந்திசிலையை போட்டோ எடுத்து ரசித்து வருகிறார்கள்.