📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 10, 2026 10:33 PM

லண்டன் கிளம்பினார் முதல்வர் விஜய்: முதலீடுகளை ஈர்க்கவே பயணம் என தமிழக அரசு அறிவிப்பு

லண்டன் கிளம்பினார் முதல்வர் விஜய்: முதலீடுகளை ஈர்க்கவே பயணம் என தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முதல்வர் விஜய், லண்டன் கிளம்பி சென்றார்.

விமான நிலையம் வந்த அவரை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். முதல்வராக பொறுப்பு ஏற்ற பிறகு விஜய் வெளிநாடு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் வரும் 17 ம் தே தி நாடு திரும்ப உள்ளார்.

முதல்வர் பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பு ஏற்று 100 நாட்களுக்குள் முதலீட்டாளர் மாநாடு வாயிலாக 1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 8491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை முன்வைத்துள்ளன. இதனால் 5,690 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக தமிழகத்தில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் மம்பட்ட உற்பத்தி , வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மின்னணு சாதனங்கள் ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பது முதல்வர் விஜயின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதனால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாகும்.

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகர திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களை சிறப்பாகவும் , வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்வதுடன், மோட்டா்ர ஸ்போர்ட்ஸ் விளையாட்டுஉள்கட்டமைப்பு விளையாட்டு சுறறுலாமறறும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகன தொழில்கள் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும். இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிறப்பு வீடியோ

இதனைக்காண:https://www.youtube.com/watch?v=SLIqUiom_iU