📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 20, 2026 08:01 AM

லிஜோமோலை மிஸ் செய்துவிட்டேனே.. அட்லீ வருத்தம்.. அவ்வளவுக்கு ஈர்த்துட்டாங்களாம்

லிஜோமோலை மிஸ் செய்துவிட்டேனே.. அட்லீ வருத்தம்.. அவ்வளவுக்கு ஈர்த்துட்டாங்களாம்

சென்னை: கேரளாவை சேர்ந்த லிஜோமோல் ஜோஸ் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான மகேஷிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதன் காரணமாக தொடர்ந்து மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இதனையடுத்து தமிழில் அவர் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இங்கேயும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வரும் அவர் குறித்து இயக்குநர் அட்லீ பேசியிருக்கிறார்.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் லிஜோமோல் ஜோஸ். பக்கத்து வீட்டு பெண் போன்ற உணர்வு, அதீத திறமை என கலக்கும் அவருக்கென்று கேரளா, தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். நடிப்பு அரக்கன் என்று புகழப்படும் ஃபகத் பாசிலுடன்தான் தனது முதல் படத்தை நடித்தார் லிஜோமோல். அந்தப் படத்திலேயே அசால்ட்டாக தனது நடிப்பில் ஸ்கோர் செய்துவிட்டார். இதன் காரணமாக மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

தமிழில் லிஜோ: மலையாளத்தில் பிஸியாக இருந்த அவர் தமிழில் சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமானார். அதில் எமோஷனல், காதல், கோபம் என அத்தனை உணர்வுகளையும் அற்புதமாக வெளிக்காட்டி நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார். இதன் காரணமாக மலையாளத்தில் எப்படி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தாரோ அதேபோல் கோலிவுட்டிலும் ஈர்த்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெய் பீம் மெகா ஹிட்: தமிழில் லிஜோமோலை பொறுத்தவரை ஜெய் பீம் திரைப்படம் மிக மிக முக்கியமான திரைப்படம். செங்கேணி என்ற கதாபாத்திரத்தை ஏற்று லிஜோமோல் அதனை அசால்ட்டாக செய்தார். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கடைசியாக அவர் தமிழில் வெளியான ஜென்ட்டில் வுமன், நூறு சாமி ஆகிய படங்களில் படத்தில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே அவருக்கான நல்ல பெயரைத்தான் பெற்றுக்கொடுத்தன.

தமிழில் பத்தா: தமிழில் இப்போது பத்தா படத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் ஒன்றாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக இப்படமும் தனக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுக்கும் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறார் லிஜோ. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அட்லீ பேச்சு: அதில் இயக்குநரும், தயாரிப்பாளருமான அட்லி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "மெர்சல் படத்தில் பணியாற்றியபோது நித்யா மேனனை பார்த்து, 'இந்தப் பொண்ணு என்ன இப்படி நடிக்குது?' என ஆச்சரியப்பட்டேன். அதற்கு பிறகு ராக்கா படத்தில் தீபிகாவை பார்த்து அந்த உணர்வு வந்தது. இப்போது லிஜோமோலை பார்த்தும் அப்படி தோன்றுகிறது. பிரமிப்பு ஏற்படுத்தக்கூடிய நடிகைதான் லிஜோமோல். அவர் இன்னும் பெரிய இடங்களுக்கு செல்ல வேண்டும். அவரை நான் மிஸ் செய்துவிட்டேனே என தோன்றுகிறது" என்றார்.