முகத்தில் 20 தையல்.. சர்ஜரி முடிஞ்சு 6 நாளில் ஷூட்டிங்.. மகிமா உழைப்பை மாறக்கவே மாட்டேன் இயக்குநர்
சென்னை: நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான 'மண்டாடி' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி 8 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், உலகளவில் ₹79.93 கோடி வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. பாய்மர படகு பந்தய பின்னணியை கொண்ட இத்திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சூரி ஹீரோ நடித்த இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுகாஸ் தமிழில் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, நாயகி மகிமா நம்பியார், நடிகர்கள் சூரி, சுகாஸ், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மண்டாடி வெற்றி விழா: விழாவில் பேசிய இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, மகிமா நம்பியார் கொடுத்த பேட்டியை பார்த்தேன். இதில்,பர்ஃபார்ம் பண்ணிட்டு போயிட்டு, நீங்கள் அழுததெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அந்த எஃபர்ட்டுக்கு ரொம்ப நன்றி. இன்னொரு விஷயம், உசுரே நீதான் என்ற பாடலை பற்றி சொல்லும்போது, உங்களுக்கு நடந்த அந்த ஆக்சிடென்ட் நிறைய பேருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். அதை சொல்லணும்னு நினைக்கிறேன். 'உசுரே நீதான்' பாடல் படப்பிடிப்பிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மகிமாவுக்கு ஒரு பெரிய விபத்து நடந்தது. அதில், முகத்தில் காயங்கள் ஏற்பட்டு, 20க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு அவரது முக அமைப்பே மாறியது. அந்த நிலையில், எனக்கு செல்ஃபி எடுத்து அனுப்பினாங்க, அந்த நேரத்திலும் நான் கூச்சமே இல்லாம, 'ஷூட்டிங் வர முடியுமா?னு கேட்டேன். ஏன்னா என் சூழ்நிலை அப்படி, அறுவை சிகிச்சை முடிந்து ஆறே நாட்களில் அவங்க படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். அந்த பாடலுக்கு பின்னால் மகிமாவின் பெரிய உழைப்பு இருக்கு அதற்கு உண்மையில் பெரிய நன்றி என்றார்.
அபாரமான வெற்றி: இந்த விழாவில் நடிகர் சூரி, மகிமா நம்பியார், தெலுங்கு நடிகர் சுகாஸ், இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய வெற்றி மாறன், கூட்டத்தில் ஒருவராக பார்த்த சூரி இன்று நம்பில் ஒருவராக இருக்கிறார். அவர் வெற்றி பெருவதை மக்கள் அவர்கள் வீட்டு பிள்ளை ஜெயிப்பதாக நினைத்து கொண்டாடுகிறார்கள் என்றார்.