📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 03, 2026 12:00 PM

கூட்டுறவு சங்க பயிர் கடன் வசூல்.! வெளியானது முக்கிய அறிவிப்பு ... குஷியில் துள்ளிக்குதிக்கும்

கூட்டுறவு சங்க பயிர் கடன் வசூல்.! வெளியானது முக்கிய அறிவிப்பு ... குஷியில் துள்ளிக்குதிக்கும்

கூட்டுறவு சங்க பயிர் கடன் வசூல்.! வெளியானது முக்கிய அறிவிப்பு ... குஷியில் துள்ளிக்குதிக்கும் விவசாயிகள்

Crop loans : கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி

விவசாயம் நான் நாட்டின் முதுகெலும்பாகும், எனவே விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் பயிர் கடன், மானிய விலையில் உரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தவெக தேர்தல் வாக்குறுதியாக பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் படி தமிழகத்தில் ஆட்சியை பிடித்த விஜய், முதலமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க் கடன்கள் 100 சதவீதம் முழுமையாகவும், ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையும் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள் தொடர் போராட்டம்

இதன்மூலம், ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38,264 விவசாயிகளுக்கு தலா ரூ.75,000 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தவெக தேர்தல் வாக்குறுதி வழங்கியது போல முழுமையாக பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரம் விவசாயிகளிடம் இருந்து பயிர் கடனும் ஒரு பக்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர் கடன் வசூல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்பட்டு. அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தவறாது கடைப்பிடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பயிர் கடன் வசூல் நிறுத்தம்

இந்நிலையில், சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.எனவே. அனைத்து விவசாயிகளின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்வதுயாதனில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன் வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு சங்கத்திலிருந்து எவரேனும் விவசாயிகளை தொடர்புகொண்டால், தொடர்பு கொண்ட கைபேசி எண் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான (Official Grievance Redressal Number) 98840 00845 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணில் புகார் அளிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி