Latest News
September 25, 2026 04:04 AM
குப்பையில் கிடந்த தங்கக்கட்டிகள், பணம்.. சண்டையிட்டு கொண்டிருந்த 5 பேர்; போலீசார் அதிரடி
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் போலீசார் ரோந்துப்பணியின்போது, குப்பையில் கிடந்த தங்கக்கட்டிகள், பணம் ஆகியவற்றுக்காக 5 பேர் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
போலீசார் விசாரணை
அவர்களிடம் இருந்து தங்கக்கட்டிகள், பணம், நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும், சண்டை போட்டு கொண்டிருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால், தங்க கடத்தல் எதுவும் நடைபெற்று அது தெரியாமல் இருக்க குப்பையில் வீசப்பட்டனவா? அல்லது வேறு எதுவும் நடந்திருக்கிறதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் அளித்துள்ளோம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளனர். குப்பையில் தங்கக்கட்டிகள், பணம் உள்ளிட்டவை கிடந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.