📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 07, 2026 05:03 AM

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.4,700 சரிவு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.4,700 சரிவு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.4,700 சரிவு - காரணம் என்ன?

வரும் நாட்களில் தங்கத்தின் விலை ரூ. 1.56 லட்சம் முதல் 1.57 லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்ப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Published : September 5, 2026 at 10:52 PM IST

புது டெல்லி: அமெரிக்க பொருளாதார கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் சமீபத்திய தகவலின்படி, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 578 ஆக இருந்த நிலையில், நடப்பு வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று அது ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 884 ஆக குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 4,700 வரை குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இதற்கிடையில் நேற்று (வெள்ளிக்கிழமை அன்று) பல்வகை பண்டகப் பரிவார்த்தனை நிலையத்தில் அக்டோபர் மாத தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 1,52,815 என்ற சிறிய உயர்வுடன் நிறைவடைந்தது. அதேசமயம், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஆகக் குறைந்தது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு ஆதரவளித்த உலகளாவிய பதற்ற நிலை

உலகளாவிய பதற்றமான சூழல் காரணமாக கடந்த வாரத்தின் தொடக்கம் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஆதரவளிக்கும் விதமாக அமைந்தது. இதனால், தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்தது. இந்த சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்த காரணத்தால் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரித்தது. தொடர்ந்து உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சத்தையும் அது எழுப்பியது.

இதற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அமெரிக்க வேலை வாய்ப்புகள் பற்றிய தரவுகள் வெளியாகின. இது சந்தையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றும் வகையில் அமைந்தது. முக்கியமாக அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

ஆகையால், தங்கத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்து டாலரில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் விளைவாக தங்கத்தின் விலை வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த காரணத்தினால் ஆகஸ்ட் 29, 31 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கணிசமாக குறைந்தது.

வரும் நாட்களில் தங்கம் விலை ஏறுமா? இறங்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் அப்படியே தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், தற்போது மீண்டும் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது. இதன் விளைவாகவே கடந்த 3ஆம் தேதி 2 சதவீத உயர்வை தங்கம் சந்தித்தது.