📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 10, 2026 08:33 PM

கோலி அல்ல.. ஆல் டைம் சிறந்த இந்திய வீரர் யார்? முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன பதில்

கோலி அல்ல.. ஆல் டைம் சிறந்த இந்திய வீரர் யார்? முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன பதில்

கோலி அல்ல.. ஆல் டைம் சிறந்த இந்திய வீரர் யார்? முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன பதில்

மும்பை: சிஎஸ்கே அணியின் முன்னாள் பேட்டர் அபினவ் முகுந்த், இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதில் ஆச்சரியமளிக்கும் விதமாக, முன்னணி பேட்டரான விராட் கோலி முதல் நான்கு இடங்களுக்குள் வரவில்லை. கோலிக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ராவை முகுந்த் தேர்வு செய்தார்.

562 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 85 சதங்கள் உட்பட 28,359 ரன்களுடன் இந்தியாவின் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களில் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக , விஜய் ஹசாரேவை விட சச்சின் டெண்டுல்கரையும், ரோஹித் சர்மாவை விட விராட் கோலியையும், ஹர்பஜன் சிங்கை விட கபில் தேவையும் தேர்வு செய்தார்.

அடுத்த கட்டத்தில், வீரேந்தர் சேவாக்கை விட சுனில் கவாஸ்கரையும், ரவீந்திர ஜடேஜாவை விட தோனியையும், வினு மன்கட்டை விட ராகுல் டிராவிட்டையும் முகுந்த் தேர்வு செய்தார். இறுதியாக, அனில் கும்ப்ளேயை விட ஜஸ்பிரித் பும்ராவையும், சௌரவ் கங்குலியை விட ரவிச்சந்திரன் அஷ்வினையும் அவர் தேர்ந்தெடுத்தார்.

டெண்டுல்கர் மற்றும் அஷ்வினா என்ற கேள்விக்கு, இதில் முகுந்த் சச்சினைத் தேர்வு செய்தார். கோலியை வீழ்த்தி பும்ராவும், கபில் தேவை வீழ்த்தி டிராவிட்டும் தேர்வாகினர். இறுதியாக, கவாஸ்கரை விட தோனியை முகுந்த் தேர்வு செய்தார். இதன் விளைவாக, சச்சின் டெண்டுல்கர், தோனி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய நால்வரும் கடைசி 4 இடத்திற்கு முன்னேறினர்.

ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகிய இருவரில், முகுந்த் சச்சினின் பக்கமே நின்றார். தோனி இந்திய அணியை வழிநடத்தி மூன்று ஐசிசி வெள்ளை-பந்து கோப்பைகளை வென்று கொடுத்ததுடன், 17,000-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இருப்பினும், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 34,357 ரன்கள் குவித்து, இந்தியாவின் அதிக ரன் குவித்து முதலிடத்தில் சச்சின் நீடிக்கிறார்.

அதன் பிறகு ராகுல் டிராவிட்டை விட ஜஸ்பிரித் பும்ராவை முகுந்த் தேர்வு செய்தார். இதன் மூலம் பும்ரா - டெண்டுல்கர் இடையேயான இறுதிப் போட்டி உறுதியானது. பும்ரா 238 போட்டிகளில் விளையாடி, 18 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 20.56 சராசரியுடன் 506 விக்கெட்டுகளை வீழ்த்தி அசாத்தியமான பந்துவீச்சு புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளார். இதற்கிடையில், டிராவிட் தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையில் 504 போட்டிகளில் விளையாடி 48 சதங்கள் உட்பட 24,064 ரன்களைக் குவித்து, இந்திய பேட்டர்கள் வரிசையில் எக்காலத்திற்குமான மூன்றாவது இடத்தை எட்டியுள்ளார்.

இறுதிப் போட்டியில், பும்ராவை விட சச்சினைத் தேர்ந்தெடுத்த முகுந்த், 'லிட்டில் மாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்தான் அனைத்து வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அறிவித்தார். பும்ரா 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்திருந்தாலும், சச்சின் 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.