Politics
September 19, 2026 09:34 PM
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்குஒரு மாத சிகிச்சை அவசியம்; டாக்டர்கள் தகவல்
சென்னை: கொளத்துார் தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ.,வுக்கு ஒரு மாதத்திற்கு மேலான சிகிச்சை தேவைப்படுவதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொளத்துார் தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு, 75, சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
நுரையீரலில் அதிகளவிலான சளி பாதிப்பு இருப்பதால், தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வருகிறோம். அவர், குறைந்தது ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் தங்கியிருந்து, சிகிச்சை பெற வேண்டும். பல்துறை டாக்டர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
Politics