📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 27, 2026 01:03 PM

கேலாங் சிராய் சமரசப் பணிக்குழு: அண்டைவீட்டார் சர்ச்சைகளைக் கையாள

கேலாங் சிராய் சமரசப் பணிக்குழு: அண்டைவீட்டார் சர்ச்சைகளைக் கையாள

கேலாங் சிராய் வட்டாரத்தில், அண்டைவீட்டாரிடையே ஏற்படும் சர்ச்சைகள் மோசமடைவதற்கு முன்பே கையாளப் புதிய சமரசப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

15 உறுப்பினர்களைக் கொண்ட அந்தப் பணிக்குழு, அண்டைவீட்டாரிடையே புரிதலை ஏற்படுத்தவும் சிறிய கருத்து வேறுபாடுகள் பெரிய சண்டைகளாக மாறுவதைத் தடுக்கவும் உதவும்.

பணிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பயிற்சிபெற்ற அடித்தளத் தொண்டூழியர்கள் என்று மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா பாங் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் குடியிருப்பாளர்களிடம் பேசிய அவர், குடியிருப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பணிக்குழு அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

“விவகாரம் சிறியதாக இருக்கலாம். இரைச்சல் அல்லது நடைபாதையில் உள்ள பொருள்களாக இருக்கலாம். அதுபற்றி அண்டைவீட்டாரிடம் பேசக் குடியிருப்பாளர்கள் சிலர் தயங்கலாம். அதற்காகத்தான் பணிக்குழு இருக்கிறது,” என்றார் பாங்.

பணிக்குழுவின் அறிமுகத்திற்கு முன்னரே சர்ச்சையில் ஈடுபட்டுள்ள குடியிருப்பாளர்களிடம் அடித்தளத் தொண்டூழியர்கள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர்.

அத்தகைய பேச்சுவார்த்தைகள் கட்டமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட இந்தப் பணிக்குழு வழிவகுக்கும் என்றார் பாங்.

சமூக சமரச நிலையங்களைவிட கேலாங் சிராய் பணிக்குழு எந்தளவு மாறுபட்டுள்ளது என்ற கேள்விக்கு, சமரச நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் விவரங்கள் மிகவும் கடுமையானவை என்று அவர் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கேலாங் சிராய் பணிக்குழு, முளையிலேயே பிரச்சினையைக் கிள்ளி எறிவதில் கவனம் செலுத்துகிறது என்று விளக்கம் அளித்த திருவாட்டி பாங், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே தொடக்கத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து நிலைமை மோசமடையாமல் தடுக்க முயற்சி செய்யும் என்று கூறினார்.

சமூகச் சமரச நிலையங்களுக்கு வருபவற்றில் 30 விழுக்காட்டுக்கும் குறைவான புகார்களே அதிகாரபூர்வ சமரசங்களுக்குச் செல்வதால் முன்கூட்டியே கலந்துரையாடல் நடைபெற பணிக்குழு கூடுதலான வாய்ப்பை வழங்கும் என்று மக்கள் கழகம் வெளியிட்ட அறிக்கை சொன்னது.