📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 30, 2026 08:00 PM

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 48.78 புள்ளிகள் சரிந்து 72,480.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 95.75 புள்ளிகள் சரிந்து 22,620.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

மும்பை: கச்சா எண்ணெயின் நிலையற்ற உறுதித்தன்மை, உயர்ந்து வரும் உலகளாவிய பத்திர வருவாய் மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு முதலீடு உள்ளிட்டவை முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் சுமார் 533.16 புள்ளிகள் உயர்ந்து 73,062.23 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 48.78 புள்ளிகள் சரிந்து 72,480.29 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 95.75 புள்ளிகள் சரிந்து 22,620.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் எடர்னல், சன் பார்மா, டைட்டன், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மெட்டல் மற்றும் பார்மா குறியீடுகள் ஒவ்வொன்றும் 1% க்கும் அதிகமாக சரிந்தன. நுகர்வோர் பொருட்கள் துறை குறியீடு 0.8% சரிவைக் கண்டது. மறுபுறம், பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் ஊடகத் துறை குறியீடுகள் 1 முதல் 2% வரை ஏற்றம் கண்டன.

முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தது வருவதும் மற்றும் அதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மீட்சி, உலகளாவிய பத்திர வருவாயில் ஏற்பட்ட ஏற்றம் உள்ளிட்டவையால், பங்குச் சந்தை அதன் வேகத்தை இழந்தது.

பிபி ஃபின்டெக், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், கோத்ரேஜ் கன்ஸ்யூமர், வாரீ எனர்ஜீஸ், ஹேவெல்ஸ் இந்தியா, எஸ்கார்ட்ஸ் குபோட்டா, சிஜி கன்ஸ்யூமர், டிசிஎம் ஸ்ரீராம், ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்தபட்ச நிலையை எட்டியது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று ரூ. 9,980.22 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

ஆசியச் சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுடன் நிறைவடைந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு, ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடுகள் ஆகியவை ஏற்றத்துடன் முடிவடைந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கில் முடிவடைந்த நிலையில், அமெரிக்கச் சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.82 ஆக வர்த்தகம் நிறைவு செய்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.54 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 103.1 டாலராக உள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட புதிய பங்குகள்

அட்ரோயிட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள், வெளியீட்டு விலையான ரூ. 134 ஐ விட 75.37% உயர்ந்து ரூ. 235 ஆக வலுவான அறிமுகத்தை பதிவு செய்தது. பிறகான வர்த்தகத்தில் 85% க்கும் அதிகமாக உயர்ந்து ரூ. 248.39 ஆக நிறைவு செய்தது.

ஸ்வஸ்திகா இன்ஃப்ரா பங்குகள், வெளியீட்டு விலையை விட 8% கூடுதல் விலையில் பட்டியலிடப்பட்டு, நல்லதொரு அறிமுகத்தை பதிவு செய்தது. பிறகு அந்த பங்குகள் 13% உயர்ந்து ரூ. 210 ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆர்மீ இன்ஃபோடெக் நிறுவன பங்குகள், பங்குச் சந்தையில் அறிமுகமான நிலையில், பங்கு ஒன்றுக்கு ரூ. 375 என்ற பலவீனமான அறிமுகத்தை சந்தித்த நிலையில், 20% சரிந்து ரூ. 300 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

எலிவேட் கேம்பஸஸ் நிறுவன பங்குகள், வெளியீட்டு விலையான ரூ. 362 ஐ விட சுமார் 2% குறைவான விலையில் பட்டியலிடப்பட்ட பிறகு, 11.7% சரிந்து ரூ. 319.70 ஆக வர்த்தகம் நிறைவு பெற்றது.

Market benchmark indices Sensex and Nifty ended lower on Wednesday.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.