📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 30, 2026 09:03 PM

சிங்கப்பூர் பொதுச் சேவை ஊழியர்களுக்கான டேட்டிங் திட்டம்

சிங்கப்பூர் பொதுச் சேவை ஊழியர்களுக்கான டேட்டிங் திட்டம்

சிங்கப்பூரில் ஒற்றையராக இருக்கும் பொதுச் சேவை ஊழியர்கள் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள உதவும் வகையில் ‘டேட்டிங்’ திட்டம் ஒன்றை ‘கவ்டெக்’ அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.

புதிய, சிங்பாஸ் அங்கீகாரம் பெற்ற முயற்சியின் மூலம் புதியவரைச் சந்தித்து, பேசிப் பழக அழைப்புவிடுக்கும் மின்னஞ்சலை ஒற்றையராக இருக்கும் பொதுச் சேவை ஊழியர்களில் சிலர் பெறக்கூடும்.

21 வயதிலிருந்து 35 வயதுக்கு இடைப்பட்ட அரசாங்க ஊழியர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள உதவும் வகையில் ‘ஃபர்ஸ்ட் டேட்’ முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் முன்னோடித் திட்டம் பொதுச் சேவைத் துறையில் சோதிக்கப்படுவதாக கவ்டெக் அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.

புதியவரைச் சந்திப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆராயும் நோக்கில் கவ்டெக்கின் வருடாந்தர ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் ‘ஃபர்ஸ்ட் டேட்’ யோசனை பிறந்தது.

பொருத்தமான துணையைச் சந்திப்பதற்குப் பயனீட்டாளர்கள் சிங்பாஸ் அம்சத்தைக் கொண்டு ‘ஃபர்ஸ்ட் டேட்’ தளத்தில் சென்று தங்கள் விருப்பங்கள், பழக்கங்கள், வாழ்க்கைக் கொள்கைகள் போன்றவை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும். சமயம், வயது போன்றவையும் அதில் அடங்கும்.

அக்டோபர் 5ஆம் தேதியுடன் விண்ணப்பங்கள் முடிவுபெறும்.

ஒற்றையர், துணையை இழந்தோர், மணமுறிவானவர்கள் ஆகியோர் தளத்தைப் பயன்படுத்தத் தகுதிபெறுகின்றனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கேள்விகளுக்குப் பதிவிடப்பட்ட பதில்களின் அடிப்படையில் பொருத்தமானவரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஒருமுறைக்கு ஒருவரை மட்டுமே சந்திக்க முடியும். ஒவ்வொரு முறையும் பொருத்தமானவருடன் பயனீட்டாளர்கள் இணைக்கப்படுவர் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

கவ்டெக் அமைப்பின் முன்னோடித் திட்டத்தின்கீழ், பொருத்தமானவர்கள் குறித்து பயனீட்டாளர்களுக்குக் குறுஞ்செய்திவழி தகவல் அளிக்கப்படும். மூன்று நாள்களுக்குள் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு சந்திப்பிற்குப் பிறகும் பயனீட்டாளர்களுக்கு ஒரு சிறிய கருத்துக்கணிப்பு அனுப்பப்படும். பொருத்தம் என்று தெரிவுசெய்யப்பட்டவரை அவர்கள் நேரில் சந்தித்தனரா போன்ற கேள்விகள் அதில் அடங்கியிருக்கும்.

பொருத்தமானவர் என்று தெரிவுசெய்யப்பட்டவரை நேரில் சந்திப்போர் ‘டேட்குவெஸ்ட்’ என்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

அதிகமான சிங்கப்பூரர்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்வதாலும் பலர் தொடர்ந்து ஒற்றையராகவே தொடர்ந்து இருப்பதாலும் புதிய சோதனை முயற்சி அறிமுகம் கண்டுள்ளது.