📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 17, 2026 09:03 AM

காவிரி விவகாரம்: "தமிழக அரசு திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டது"

காவிரி விவகாரம்: "தமிழக அரசு திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டது"

காவிரி விவகாரம்: "தமிழக அரசு திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டது" - இபிஎஸ் குற்றச்சாட்டு

"தமிழக அரசு முறையான திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. இதனால், தமிழக மக்களின் எதிர்கால குடிநீர் தேவைக்குக்கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும்" என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,

"சம்பா சாகுபடிக்கு ஜனவரி மாதம் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. கர்நாடகாவிலிருந்து உரிய காவிரி நீரைப் பெறாததால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குத் தமிழக அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்குத் தேவையான உரிய நீரை கர்நாடக அரசு வழங்க பாரதப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட தமிழக அரசு வலியுறுத்தவில்லை.

தமிழக அரசு முறையான திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. இதனால், தமிழக மக்களின் எதிர்கால குடிநீர் தேவைக்குக்கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும்" என்றார்.