📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 24, 2026 10:05 PM

”இனிமே பேருந்தில் இதெல்லாம் பண்ணக்கூடாது”; அரசு அதிரடி உத்தரவு

”இனிமே பேருந்தில் இதெல்லாம் பண்ணக்கூடாது”; அரசு அதிரடி உத்தரவு

”இனிமே பேருந்தில் இதெல்லாம் பண்ணக்கூடாது”; அரசு அதிரடி உத்தரவு

சிங்கப்பூர் எப்போதும் தூய்மையுடனும், தனி மனித ஒழுக்க நெறிகளை முறையாகப் பின்பற்றும் நாடுகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. அந்த வகையில், தற்போது புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், மற்ற பயணிகளுக்கு எந்தவித இடையூற்றையும் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு இடையூறு ஏற்படுத்தினால் அவர்களுக்கு, 500 சிங்கப்பூர் டாலர் (ரூ.3.74 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த சட்டத்தின் படி, பேருந்து இருக்கைகள் மீது கால் வைப்பது, பேருந்துக்குள் சத்தமாகப் பாடலை ஒலிக்கச் செய்வது, மது அருந்துவது, குப்பை போடுவது உள்ளிட்ட முறையற்ற செயல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. சட்டத்தை மீறி இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, 500 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள், உள்நாட்டுப் பயணிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என அனைவருக்கும் பொருந்தும். இந்த விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது அபராதம் விதிக்கும் அதிகாரம் இதற்காக பணியமர்த்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.