📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 10, 2026 02:33 AM

Immortal Day 5 Box Office

Immortal Day 5 Box Office

சென்னை: மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இம்மார்ட்டல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் நடித்துவருகிறார். இருப்பினும் அவருக்கு சில படங்களே பெயர் சொல்லும்படி அமைந்திருக்கின்றன. தொடர்ந்து சொதப்பினாலும்; எப்படியாவது ஹீரோவாக ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார். அந்தவகையில் இப்போது மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இம்மார்ட்டல் படத்தில் நடித்திருக்கிறார். இது ஹாரர், ஃபேன்டஸி, சர்வைவல் த்ரில்லர் ஆகியவைகளை இணைத்த வாம்ப்பயர் ஜானரில் உருவாகியிருக்கிறது.

கயாடுவுக்கு முதல் படம்: கயாடு லோஹர் முதன்முதலில் கமிட்டான தமிழ் படம் இதுதான். ஆனால் இந்தப் படத்தின் சிஜி பணிகள் இரண்டு வருடங்கள் வரை இழுத்ததால்; இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னதாகவே டிராகன் படம் வந்துவிட்டது. அதன் காரணமாக அவரது கரியரில் முதல் படமாக டிராகன் அமைந்திருக்கிறது. இந்தப் படத்திலும் கயாடு அழகோடு மட்டுமின்றி அழகான நடிப்பையும் வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிஜி பணிகள் அபாரம்: படத்தின் ப்ளஸ்ஸாக கதை, திரைக்கதை, சாம் சி.எஸ்ஸின் இசை இருக்கின்றன. இவறோடு சேர்ந்து சிஜி பணிகளும் அட்டகாசமாகவே அமைந்திருந்தன. பல விஷயங்கள் உண்மையா இல்லை கிராஃபிக்ஸா என்று ரசிகர்கள் குழம்பும் அளவுக்கு வேலைகள் இருந்தன. படமானது ரசிகர்களிடம் கனெக்ட் ஆவதற்கு அந்த சிஜி பணிகளும் முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

ஜிவிக்கு ஹிட்: ஆகமொத்தம் இந்தப் படம் ஜிவி பிரகாஷுக்கு ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதற்கு முன்பு வெளியான ஹேப்பி ராஜைவிடவும் இந்தப் படம் பல விதங்களில் உயர்ந்தே நிற்கிறது. இதன் காரணமாக இனி வரும் காலங்களிலும் மாரியப்பனுடன் சேர்ந்து படம் செய்யும் திட்டத்தில்தான் அவர் இருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில் அந்தப் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இம்மார்ட்டல் 5வது நாள் வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி அந்தப் படமானது ஐந்தாவது நாளான நேற்று 60 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். சராசரியாக ஒரு நாளைக்கு அப்படம் 60 லட்சத்துக்கு குறையாமல் வசூல் செய்கிறது. மொத்தம் ஐந்து நாட்களில் அப்படம் 5 கோடியே 72 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிகிறது. கூட்டம் இன்னமும் ஓரளவுக்கு வந்துகொண்டிருப்பதால் இந்த வசூல் எண்கள் மேற்கொண்டு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.