📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 27, 2026 07:04 PM

எட்டுப் பாடங்களுக்கு மேல் எடுக்கும் உயர்நிலை 3 மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது, சிங்க‌ப்பூர் செய்திகள்

எட்டுப் பாடங்களுக்கு மேல் எடுக்கும் உயர்நிலை 3 மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது, சிங்க‌ப்பூர் செய்திகள்

எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை தேர்வு செய்யும் உயர்நிலை 3ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அவர்களில் பலர் ஆறு பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர்.

தொடக்கக் கல்லூரி சேர்க்கை மதிப்பெண் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு 2026ல் குறைவான பாடங்களையே மாணவர்கள் படிக்கின்றனர்.

2028லிருந்து தொடக்கக் கல்லூரி சேர்க்கை முறை, ஆறு பாடங்களுக்குப் பதிலாக மாணவர்களின் ஐந்து ஜி3-நிலை பாடங்களின் தேர்ச்சி அடிப்படையில் அமையும்.

தற்போதைய உயர்நிலை 3 மாணவர்கள், இந்தப் புதிய மதிப்பெண் விதியின்கீழ் தொடக்கக் கல்லூரியில் சேரும் முதல் பிரிவாக இருப்பார்கள்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சு, 2026ல் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜி3-நிலை பாடங்களை எடுக்கும் உயர்நிலை 3ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 2025ல் இருந்த 34 விழுக்காட்டிலிருந்து பாதியாகக் குறைந்து தற்போது 14 விழுக்காடாக உள்ளது என்று தெரிவித்தது.

2025 முதல் 2026 வரை, ஏழு பாடங்களை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 54 விழுக்காட்டிலிருந்து 57 விழுக்காடாகச் சற்று அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஆறு அல்லது அதற்கும் குறைவான பாடங்களை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 12 விழுக்காட்டிலிருந்து 29 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

2028லிருந்து தொடக்கக் கல்லூரி மாணவர் சேர்க்கை எல்1ஆர்5க்குப் பதிலாகப் புதிய எல்1ஆர்4 (ஒரு மொழிப் பாடம், நான்கு தொடர்புடைய பாடங்கள்) மொத்த மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடப்படும். இதன் அதிகபட்ச வரம்பு 16 ஆகும். இது தேவையான ஜி3-நிலை பாடங்களின் எண்ணிக்கையை ஆறிலிருந்து ஐந்தாகக் குறைக்கிறது.

இந்த மாற்றம் மாணவர்களுக்குப் பாடச்சுமையை குறைத்து நேரத்தை மற்றவற்றில் செலவிட உதவுகிறது என்று ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியிருந்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“ஒரு பாடத்தைக் குறைவாகப் படிப்பதால் மீதமாகும் நேரத்தை மாணவர்கள் பரந்த அளவிலான திறன்களை வளர்த்துக் கொள்ளப் பயன்படுத்தலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.