📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News October 18, 2026 02:03 AM

சவுதி அரேபியாவுக்கான விமான சேவை 24

சவுதி அரேபியாவுக்கான விமான சேவை 24

சவுதி அரேபியாவுக்கான விமான சேவையை வருகிற 24-ந்தேதி வரை ஏர் இந்தியா தற்காலிக ரத்து செய்து உள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கடுமையான தாக்குதலால் மேற்காசிய பகுதியில் பதற்ற நிலை தொற்றியுள்ளது. இந்த சூழலில், சவுதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட பயண அறிவிப்பில், நடப்பு சூழலில், வருகிற 24-ந்தேதி வரை சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மம் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதனால், அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 25 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பயணத்திற்கான முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள், 2026-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி வரை ஒரு முறை தேதியை மாற்றிக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

அவர்கள் மேற்காசியா பகுதியில் வேறு பயண நிறுத்தம் ஒன்றை தேர்ந்தெடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும், அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்த தங்களுடைய விமான நிறுவனத்துடன் பேசி உறுதி செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான பயணம் வேண்டாம் என முடிவு செய்து, பயண சேவையை ரத்து செய்த வாடிக்கையாளர்கள் முழு தொகையை திரும்ப பெற்று கொள்ளவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களும் சவுதி அரேபியாவுக்கான தங்களுடைய விமான சேவையை தற்காலிக ரத்து செய்து உள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

அவர்களில் அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

கடுமையான பாதிப்பு

இதனை சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து கழகமும் உறுதிப்படுத்தியது. சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

நாடுகள் எச்சரிக்கை