📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 19, 2026 01:04 AM

'சன்னரக அரிசி' என்ற பெயரில் ரேஷன் அரிசி விற்கப்படுவதாக புகார்; கூட்டுறவு அங்காடியில் பொதுமக்கள் வாக்குவாதம்

'சன்னரக அரிசி' என்ற பெயரில் ரேஷன் அரிசி விற்கப்படுவதாக புகார்; கூட்டுறவு அங்காடியில் பொதுமக்கள் வாக்குவாதம்

'சன்னரக அரிசி' என்ற பெயரில் ரேஷன் அரிசி விற்கப்படுவதாக புகார்; கூட்டுறவு அங்காடியில் பொதுமக்கள் வாக்குவாதம்

பொன்னி கூட்டுறவு அங்காடியில் 'சன்னரக' அரிசியை வாங்கிய பொதுமக்கள், மீண்டும் அங்காடியின் விற்பனையாளர்களிடம் அரிசியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்று கொண்டனர்.

Published : October 18, 2026 at 9:25 PM IST

சேலம்: சேலத்தில் பொன்னி கூட்டுறவு அங்காடியில் சன்னரக அரிசியை வாங்கிய பொதுமக்கள், ரேஷனில் வழங்கப்படும் இலவச அரிசி போன்று இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அமுதம் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள், பொன்னி அங்காடிகள் போன்றவற்றின் மூலம் கிலோ ரூ.30க்கு சன்னரக அரிசி விற்பனையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

அதன்படி, இன்று (அக்.18) சேலம் ஈரடுக்கு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியில் சன்னரக அரிசி விற்பனையை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ கொண்ட அரிசி பை 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது..

பணம் கொடுத்து வாங்கிய சன்னரக அரிசி, ரேஷன் கடையில் வழங்கப்படுவது போன்ற இருந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன், பொன்னி கூட்டுறவு அங்காடி விற்பனையாளர்களிடம் சன்னரக அரிசியைக் கொடுத்து பணத்தைத் திரும்பத் தரும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ரேஷன் கடைகளிலேயே அரிசி இலவசமாக கிடைக்கும்போது அதே அரிசியை சன்னரக அரிசி என்று ஒரு கிலோ 30 ரூபாய்க்கு வாங்கி என்ன செய்வது? அதற்கு ரேஷன் அரிசியவே வாங்கிக் கொள்கிறோம்? என பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொன்னி அங்காடியில் சன்னரக அரிசியை வாங்கிய தேசராணி கூறுகையில், "ரேஷன் அரிசியை வாங்கியே நாங்கள் சமைத்து உணவருந்தி வருகிறோம். சரி, நல்ல அரிசியை கிலோ ரூபாய் 30 தருகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், நான் இந்த பொன்னி கூட்டுறவு அங்காடி வந்தேன். எங்கள் பிள்ளைகள் நல்ல அரிசி என்றால் நன்றாக சாப்பிடுவார்கள் என்று தான் இங்கு வந்தேன். அரிசியை கையில் எடுத்துப் பார்த்தோம். ரேஷன் அரிசி தான். அந்த அரிசியும் விற்றுத் தீர்ந்துவிட்டது.

அரிசியை வாங்கினவர்களும் திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக் கொண்டனர். ரேஷனில் வழங்கப்படும் அரிசியை கிலோ ரூபாய் 30- க்கு விற்பனை செய்கின்றனர். ரேஷன் அரிசியை ரூபாய் 30- க்கு வழங்கினால் எப்படி?" என்று கேள்வி எழுப்பினார்.