சிங்கப்பூர் துறைமுகத்தில் விபத்து; பலியான ராணிப்பேட்டை இளைஞரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஸ்திரி மணி. இவரது மகன் வினோத் (வயது 33). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், குடும்பச் சூழல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள `துவாஸ்' சரக்கு முனைய துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் வினோத். அங்கு வரும் கப்பல்களில் சரக்குகளை ஏற்றுதல், இறக்குதல், அடுக்கி வைத்தல் மற்றும் பாதுகாப்பாக நிலை நிறுத்துதல் ஆகிய வேலைகளில் சகப் பணியாளர்களுடன் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி காலை 8.40 மணியளவில், வினோத்தும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய துரை என்ற மற்றொருத் தொழிலாளியும் துறைமுகத்தின் உயரமான இடத்தில் பணியில் ஈடுபடுவதற்காக பாதுகாப்பு கூண்டு போன்ற மேன் கேஜ் பெட்டியில் ஏறி நின்றனர். கிரேன் வாகனம் மூலம் அந்த மேன் கேஜ் பெட்டி உயரமான இடத்துக்குத் தூக்கப்பட்டது.