📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 01, 2026 05:04 PM

சிங்கப்பூர் பசுமை கட்டுமான ஆய்வுக்கு $30 மில்லியன் நிதி

சிங்கப்பூர் பசுமை கட்டுமான ஆய்வுக்கு $30 மில்லியன் நிதி

சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் பசுமைத் திட்டங்கள் குறித்து ஆய்வுகள் நடத்த $30 மில்லியன் நிதி ஒதுக்கப்படவுள்ளது.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், ஏ*ஸ்டார், கட்டுமான, பொறியியல் நிறுவனமான வோ ஹப், துறை சார்ந்த அமைப்புகள் ஆகியன அந்த நிதிக்குப் பங்களிக்கவுள்ளன.

குடியரசில் கட்டப்படும் கட்டடங்களில் பசுமைத் திறனை எவ்வாறு உள்ளடக்கலாம் என்பதை அறிந்துகொள்ள ஆய்வுகள் நடத்தப்படும்.

வியாழக்கிழமை (அக்டோபர் 1) நடந்த கட்டுமானத் தொழில்நுட்பப் புத்தாக்க ஆய்வகக் கருத்தரங்கில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் பேசினார்.

அதில் கட்டமைக்கப்பட்ட தனியார் சூழல் துறை மேற்கொண்டுள்ள ஆகப் பெரிய மேம்பாட்டு முதலீடு சார்ந்த ஆராய்ச்சிகளில் பசுமைத் திறன் குறித்த இந்த ஆய்வும் ஒன்று என அவர் தெரிவித்தார்.

‘வோ ஹப்-எஸ்ஐடி-ஏ*ஸ்டார்- நிலையான கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கான கூட்டமைப்பு ஆராய்ச்சித் திட்டம்’ என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தில் ஏழு ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

நீடித்த நிலைத்தன்மை கொண்ட கட்டுமானத் தளவாடப் பொருள்கள், புதுமையான அடித்தளக் கட்டமைப்புகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைவான கரியமில வெளிப்பாடும், மறுபயனீடு செய்யும் தன்மையும் உடைய வடிவமைப்புகள் ஆகிய அம்சங்களை அவ்வேழு ஆய்வுகளும் உள்ளடக்கும்.

கட்டிமுடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் துறையில் ஆய்வு கவனம் செலுத்தும். அத்துறையில் தெளிவான தேவைகள் அடையாளம் காணப்படும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

உதாரணமாக மிகக் குறைவான கரியமிலவாயுவைக் கொண்ட கான்கிரீட் வகைக் கற்களை உற்பத்தி செய்தலை அதிகரித்தல், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தினால் வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துதல், கட்டுமானக் கழிவுகளைப் பயனுள்ள வகையில் மாற்றியமைத்துக்கொள்ளும் திறன், அடித்தளத்தில் பயன்பட்ட எஃகு (ஸ்டீல்) இரும்புகளை மறுபயனீடு செய்தல் ஆகியவற்றில் ஆய்வு அதன் கவனத்தைச் செலுத்தும் என்று அமைச்சர் கூறினார்.

ஆய்வுகளின் வழி மேம்படுத்தப்பட்ட தீர்வுகள், கரியத்தைக் குறைத்து, உற்பத்தித் திறனை மேம்படுத்தி, வளங்களை நிர்வகிக்கும் ஆற்றலை ஊக்குவித்து, சிங்கப்பூரின் மீள்திறனுக்கு வலுசேர்க்கும் என்று அமைச்சர் சீ அவரது உரையில் விளக்கினார்.

கட்டடங்களைக் கட்டுதல், கட்டுமானத்தில் உபயோகிக்கப்படும் பொருள்களை பிரித்தெடுத்தல், உருவாக்குதல், அவற்றின் போக்குவரத்து ஆகிய செயல்பாடுகளால் அவை கரியமிலம் உள்ளடங்கும் தன்மை கொண்டவை ஆகின்றன. அதுவே பசுங்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்று அழைக்கப்படுகின்றன.