📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 07, 2026 03:04 PM

சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க செய்யூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு

சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க செய்யூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு

சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க செய்யூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு

பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செய்யூர் தளம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

முக்கிய சிறப்பம்சங்கள்:

கும்மிடிப்பூண்டி தேர்ந்தெடுக்கப்பட்டால், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்டத்தின் கட்டமைப்புகளும் பொருளாதாரமும் மேம்படும். மாநெல்லூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், கும்மிடிப்பூண்டி மற்றும் ஸ்ரீசிட்டி சிப்காட் பகுதிகளுக்கு அருகிலும் அமைந்துள்ளதால் சரக்கு போக்குவரத்து எளிதாகும். மேலும், வடமாவட்ட மக்கள் சென்னை விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய தேவையும் குறையும்.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற்று இத்திட்டம் நடைமுறைக்கு வர குறைந்தது 5 முதல் 6 ஆண்டுகள் ஆகும்.