சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080க்கு விற்பனை!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080க்கு விற்பனை!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அதாவது நேற்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,185க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,480க்கு விற்றது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,135க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.