📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 19, 2026 06:33 AM

அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல்: அதிருப்தியாளர்களுக்கு பழனிசாமி கல்தா

அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல்: அதிருப்தியாளர்களுக்கு பழனிசாமி கல்தா

சென்னை: இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய, அ.தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில், வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க., சார்பில் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல், தேர்தல் கமிஷனிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில், அ.தி.மு.க ., பொதுச்செயலர் பழனிசாமி , துணை பொதுச்செயலர் முனுசாமி, பொருளாளர் சீனிவாசன் உட்பட 40 பேரின் பெயர்கள் உள்ளன. ஆனால், பழனிசாமி மீதான அதிருப்தியில், தனி அணியாக செயல்படும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சண்முகம் உள்ளிட்டோர் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

இடைத்தேர்தலில், மனஸ்தாபங்களை மறந்து, கட்சி வெற்றிக்காக ஒன்றிணைந்து பணி செய்யுமாறு, நிர்வாகிகள் பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அதிருப்தியாளர்களை பழனிசாமி மீண்டும் புறக்கணித்து இருப்பது,, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.