Ashok Selvan: நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..? கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது
Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?
அன்பில் அவன் படத்தின் விழாவில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளிக்கும்போது நடிகர் அசோக் செல்வன் கோபப்பட்டார்.
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் இன்று அன்பில் அவன் என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முத்தக் காட்சி இடம்பிடித்துள்ளது.
இந்த முத்தக்காட்சி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியினால் அசோக் செல்வன் கோபம் அடைந்தார். கோபம் அடைந்த அசோக் செல்வன் அவர்களிடம்,
முத்தம் கொடுத்ததே இல்லையா?
Un nenaipulaam Sombu(kiss) mela than iruku moment 😂😂😂2 Years hardwork ah pathilam kekamatingala ??@AshokSelvan thug reply 😂😂#AnbilAvan pic.twitter.com/UEnqrBwBvz
இவ்வாறு அவர் பேசினார்.
கோபத்தை மறைத்து சிரிப்பு:
தொடக்கத்தில் கோபப்பட்டாலும் பின்னர் சிரித்து தனது கோபத்தை அசோக் செல்வன் கட்டுப்படுத்தினார். காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
அசோக் செல்வனுடன் இணைந்து இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், காதிர்பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 2.37 மணி நேரம் ஓடும் இந்த படத்திற்கு செல்வா ஆர்கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகள் பதிவு செய்துள்ளார். விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். திரைக்கதையை இயக்குனர் கார்த்திகேயன், விக்னேஷ் ராஜாவுடன் இணைந்து அசோக் செல்வன் எழுதியுள்ளார்.
அன்பில் அவன் படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதியின் பத்தா, ஜேசன் சஞ்சய்யின் சிக்மா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் தக் லைஃப் படம் கடைசியாக வெளியானது. கடைசியாக அவருக்கு போர் தொழில் படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் சண்டை, காதல், அதை அவர்கள் இருவரும் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே படத்தின் மையக்கரு ஆகும். காதல் திருமணம் செய்து கொண்ட இருவர் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர்? அப்போது அவர்கள் வாழ்வில் நடந்த எதிர்பாராத சம்பவம் என்ன? அந்த சம்பவத்தில் இருந்து எப்படி மீள்கின்றனர்? என்பதே படத்தின் மையக்கதை ஆகும்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி