📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
அன்றாடப் பயன்பாட்டுக்கும் வேலையிடத்திலும் ஏஐ பயன்படுத்த குடியிருப்பாளர்களுக்கு உதவி, சிங்க‌ப்பூர் செய்திகள் எஸ்.ஐ.ஆர் விவகாரம்: ராகுல் காந்தி மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய தவெக நிர்வாகி; அதிகாரிகள் தொடர் சோதனையால் பரபரப்பு! தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசியக்கொடி பேரணி.. டெல்லியில் 6000 போலீசார் குவிப்பு: அபிஜித் தீப்கே கைதாக வாய்ப்பு

Singapore Tamil October 16, 2026 06:03 PM

அப்துல் கலாமின் 95வது பிறந்தநாள் விழா சிங்கப்பூரில்

அப்துல் கலாமின் 95வது பிறந்தநாள் விழா சிங்கப்பூரில்

முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், அப்துல் கலாம் விஷன் சொசைட்டி சிங்கப்பூர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

எண் 2, பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் திவாரியும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

சமூகத்திற்குப் பெரும்பங்களிப்புகளை வழங்கியவர்களைச் சிறப்பிக்கும் வகையில், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாமைப் பற்றிய தங்களது கருத்துகளை மாணவர்கள் பகிர்ந்துகொள்வர். கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். இரவு உணவு வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் சிங்கப்பூர் அப்துல் கலாம் விஷன் அமைப்பின் இணையவழிப் படிவத்தில் பதிவு செய்யலாம்.