📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 08, 2026 08:03 AM

அமைச்சரான தனது மகனின் உரையை காணவந்த முன்னாள் சபாநாயகர் தனபால்

அமைச்சரான தனது மகனின் உரையை காணவந்த முன்னாள் சபாநாயகர் தனபால்

அமைச்சரான தனது மகனின் உரையை காணவந்த முன்னாள் சபாநாயகர் தனபால்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பேசத்தொடங்கினார். முன்னதாக அவரது உரை காண்பதற்காக முன்னாள் சபாநாயகரும், அவருடைய தந்தையுமான தனபால் அவரது குடும்பத்தினருடன் பேரவைக்கு வந்திருந்தார். மாடத்திலிருந்து அமைச்சரின் பெற்றோர் தனது மகன் உரையாற்றுவதை கண்டுகளித்தனர். இதை கவனித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் சபாநாயகர் தனபாலை வரவேற்று உருக்கமாக பேசினார். அதற்கு தனபால் மற்றும் குடும்பத்தினர் எழுந்து நின்று தங்கள் நன்றியை தெரிவித்தனர்.