📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 29, 2026 03:01 PM

’அக்கா’ கீர்த்தி சுரேஷ் அக்டோபர் மாசம் வராங்க.. ராதிகா ஆப்தேவுடன் செம ஃபேஸ் ஆஃப்.. ரிலீஸ் தேதி இதோ!

’அக்கா’ கீர்த்தி சுரேஷ் அக்டோபர் மாசம் வராங்க.. ராதிகா ஆப்தேவுடன் செம ஃபேஸ் ஆஃப்.. ரிலீஸ் தேதி இதோ!

சென்னை: 'டோரதி' படத்தின் டைட்டில் ரோல் கீர்த்தி சுரேஷ் என நினைத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கே தம்பி உனக்கொரு அதிர்ச்சி என்பது போல கார்த்திக் சுப்புராஜ் கீர்த்தி சுரேஷை ஒரு கேமியோ ரோல் போல ஆக்கிவிட்டார் என பலரும் புலம்பித் தவித்து வருகின்றனர்.

சத்யவான் சாவித்ரி படம் எப்போது வெளியாகும் என்றும் இன்னமும் தெளிவாக தெரியாத நிலையில், கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த 'அக்கா' நெட்பிளிக்ஸ் சீரிஸ் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

நெட்பிளிக்ஸில் சமீபத்தில் ராதிகா ஆப்தே நடித்து வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 3 இளைஞர்கள் மத்தியில் டிரெண்டான நிலையில், அடுத்து 'அக்கா' வெப்சீரிஸ் அக்டோபர் மாதம் வெளியாக காத்திருக்கு.

'அக்கா' கீர்த்தி சுரேஷ்: டெய்லர் அக்கா, பலூன் அக்கா, ஜிம் அக்கா, ரீல்ஸ் அக்கா என ஏகப்பட்ட அக்காக்கள் சோஷியல் மீடியாவில் வலம் வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நெட்பிளிக்ஸில் உருவாகியுள்ள 'அக்கா' சீரிஸ் மூலம் ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறார். நெட்பிளிக்ஸ் இந்த தொடர் குறித்து அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் அக்காவும் ஆஜர் ஆகிறார்.

ரிலீஸ் தேதி: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30ம் தேதி முதல் தீபாவளி வார ட்ரீட்டாக அக்கா வெப்சீரிஸ் வெளியாக காத்திருக்கிறது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்துள்ள இந்த வெப்சீரிஸை தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ளார். 1980களில் தென்னிந்தியாவில் நடக்கும் கதையாகா இந்த சீரிஸை உருவாக்கியுள்ளனர். பெண்கள் பவர்ஃபுல்லாக கேங்ஸ்டர்கள் போல ஒரு கிராமத்தை ஆட்சி செய்து வரும் நிலையில், அவர்கள் கூட்டத்துக்குள் நுழையும் ஒரு அந்நியரால் என்ன ஆகிறது என்பது தான் அக்கா சீரிஸின் கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன.