📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 03, 2026 10:04 AM

ஆசிய விளையாட்டு போட்டி வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை குங்கும்

ஆசிய விளையாட்டு போட்டி வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை குங்கும்

டோக்கியோ: ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தை தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை குங்கும் மோஹோத்

தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. சிய விளையாட்டு நிறைவு விழா நாளை நடக்கவுள்ளது. இதில் இந்திய மூவர்ணக்கொடியை, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா ஏந்தி வர உள்ளார். இவர், இம்முறை 2 தங்கம், ஒரு வெள்ளி என, மூன்று பதக்கம் கைப்பற்றி இருக்கிறார்.

இந்நிலையில் இன்று (அக் 03) வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது; தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை குங்கும் மோஹோத் தங்கம் வென்றார். இவர் கொரியாவின் ஓ யே ஜினை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பதக்கப்பட்டியல்!

இந்தியா இதுவரை 77 பதக்கங்களை வென்று பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.