144 தடை உத்தரவு.. பூட்டி சீல் வைக்கப்பட்ட கோயில்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், ராஜராஜன் கோயிலுக்கும் தனக்கும் கும்பாபிஷேகத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று சொல்லும் நிலையில், கார்த்திக்கு எப்படி கும்பாபிஷேகம் நடத்துவது என தெரியாமல் வருத்தப்படுகிறார். அதே நேரத்தில், இவங்க எல்லாம் தடுத்தாலும், நமக்கு மேல் ஒரு சக்தியாக இருக்கிறது. அந்த சக்தி நிச்சயமாக இந்த கும்பாபிஷேகத்தை நடத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கார்த்திக் சொல்கிறார்.
கார்த்திகை தீபம்: இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சந்திரகலா, சிவனாண்டியிடம் சென்று இந்த கோவில் பிரச்சனையை இரண்டு ஊர்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாற்ற வேண்டும், அந்தபழியை கார்த்திக் மீதும் சாமுண்டீஸ்வரி மீதும் பழிபோடலாம் என்று சொல்கிறார். அதற்கு ஏற்றபடி சிவனாண்டி ஆட்களையும் ஏற்பாடு செய்கிறார். இதையடுத்து, கும்பாபிஷேகம் நடக்காததற்கு காரணம் இந்த ஊர்க்காரர்கள்தான் என்று சொல்லி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் கோவில் தொடர்பான பிரச்சனையாக இருந்த இந்த விஷயம், கடைசியில் ஊரில் பெரிய கலவரமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த கிராமத்திற்கு 144 தடை உத்தரவும் போடப்படுகிறது.
144 தடை உத்தரவு: இந்த கலவரத்தின் போது சாமுண்டீஸ்வரியின் தலையிலும் கல் விழுந்துவிடுகிறது. இதனால் இந்த பிரச்சனை இன்னும் பெரிய பஞ்சாயத்து பிரச்சனையாக மாறிவிட, மாவட்ட ஆட்சியரும் நேரில் வந்து அங்குள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது கார்த்திக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் இடையிலான கோவில் பிரச்சனை, தற்போது ஊர் பிரச்சனையாக மாறியிருப்பதால் தான் இந்த கிராமத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். மேலும், இனிமேல் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாது என்று சொல்லி, கோவிலை பூட்டி சீல் வைக்கிறார். இதை பார்த்து கார்த்திக் மிகவும் வேதனை அடைகிறார். ஆனால் சந்திரகலாவோ, தான் நினைத்தது போலவே பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டதை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறாள். இனிமேல் இந்த கோவில் பிரச்சனை எந்த மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது, கார்த்திக் எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.