📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka October 10, 2026 07:03 AM

10 ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு பெற்று உலகமகா டக் அவுட்டான நிக் மேடின்சன்!

10 ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு பெற்று உலகமகா டக் அவுட்டான நிக் மேடின்சன்!

10 ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு பெற்று உலகமகா டக் அவுட்டான நிக் மேடின்சன்!

டர்பன்: சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்குத் திரும்பிய தொடக்க ஆட்டக்காரர் நிக் மேடின்சன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து படுமோசமான சாதனையை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக நிக் மேடின்சன் களமிறங்கினார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சரியான தொடக்க வீரர் இல்லாததால் 10 ஆண்டுகளுக்கு முன் சில டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்த இவரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தேர்வு செய்தது. இவரது கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய நிக் மேடின்சன் நீண்ட நேரமாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்தார். ஆட்டத்தின் 11-வது ஓவரில் மார்கோ ஜான்சன் வீசிய பந்தில் போல்டான இவர், 33 பந்துகளைச் சந்தித்தும் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளைச் சந்தித்து ரன் கணக்கைத் தொடங்காமல் ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் என்ற மோசமான சாதனையை நிக் மேடின்சன் செய்தார். இதற்கு முன்பு 2022-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக டேவிட் வார்னர் 22 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதுமின்றி வெளியேறியதே ஆஸ்திரேலிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது மேடின்சன் முறியடித்துள்ளார்.

உலகளவில் நியூசிலாந்து வீரர் டேரின் முர்ரே 1995-ல் இலங்கை அணிக்கு எதிராக 39 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்டானது முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த உலகமகா டக் அவுட் பட்டியலில் மேடின்சன் தற்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த 2016 டிசம்பரில் தனது கடைசி டெஸ்டில் விளையாடிய மேடின்சன், அதன்பின் தொடர்ச்சியாக 88 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. இரண்டு போட்டிகளுக்கு இடையே அதிகபட்சமாக 88 ஆட்டங்களைத் தவறவிட்டு மீண்டும் கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். எனினும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அரிய வாய்ப்பில் ரன் எதுவும் அடிக்காமல் வெளியேறி பெரும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளார்.