📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 29, 2026 04:03 AM

யுபிஐ கட்டண விவகாரம்: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

யுபிஐ கட்டண விவகாரம்: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வாரங்களில் விளக்கம் தருமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இருப்பினும் வரும் அக்.15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வழக்கறிஞர் அஞ்சன் தத்தா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘புதிய யுபிஐ கட்டணங்களால் வணிகர்கள் இந்தக் கூடுதல் செலவை நுகர்வோர் மீது சுமத்துவர். எனவே இது சாமானிய மக்களைப் பாதிக்கும்.

எனவே, யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்.28) விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அடிப்படை தேவைகளுக்கான யுபிஐ பரிவர்த்தனையின் போது வசூலிக்கப்படும் கட்டணம் ‘வரியா அல்லது கட்டணமா?’ என்பது குறித்து விளக்க வேண்டும். இது குறித்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக விளக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசு சார்பில் இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கடரமணன், ‘யுபிஐ கட்டண விவகாரத்தில் 96 சதவீத பயனாளிகள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. யுபிஐ கட்டணம் அரசுக்கு சேராது. அது அந்த பரிவர்த்தனையை மேற்கொள்ள உதவும் வங்கி மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு செல்லும்’ என்று தெரிவித்தார்.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் அக்.15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ரயில்​வே, தொலைத்​தொடர்​பு, எரிபொருள் நிலையங்கள் (பெட்​ரோல் பங்க்), காப்​பீட்டு பிரீமி​யம் மற்​றும் மின்​சா​ரம் / நீர் போன்ற பயன்பாட்​டுக் கட்​ட​ணங்​களுக்கு (ரூ.2,000-க்கு மேல்) சதவீதத்துக்குப் பதிலாக ஒரு பரி​வர்த்​தனைக்கு ரூ.5 மட்டுமே நிலை​யான கட்​ட​ண​மாக வசூலிக்​கப்​படும். என்றும் என்பிசிஐ தெரிவித்துள்ளதும் நினைவுகூரத்தக்கது.