Business
October 15, 2026 12:03 PM
வரத்து குறைந்ததால் அரிசி விலை உயர்வு
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
விலைவாசி தொடர்பாக விவாதிக்க ரேசன் கடைக்கு செல்வோம் என பேசிய பரந்தாமனுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
அரிசி, சர்க்கரை, பருப்பு விலை குறைப்பு தொடர்பாக ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
விலைவாசி குறித்து அரைகுறையாக தெரிந்துகொண்டு திமுக நிர்வாகி பரந்தாமன் சவால் விடுகிறார்.
பரந்தாமன் செல்லாமல் இருந்திருக்கலாம், நாங்கள் ரேசன் கடை பொருள் வாங்கி உணவு உண்டு வாழ்ந்தவர்கள் தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Business