📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 15, 2026 01:05 PM

சவுதி அரேபியா மீதான தாக்குதல் எதிரொலி: விசா காலம் முடிந்தாலும் இந்தியர்களுக்கு சலுகை

சவுதி அரேபியா மீதான தாக்குதல் எதிரொலி: விசா காலம் முடிந்தாலும் இந்தியர்களுக்கு சலுகை

ரியாத்: சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அண்மையில் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். பதற்றமான சூழல் காரணமாக, அக்.,17ம் தேதி வரை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.

அறிக்கை; சவுதியில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், கத்தார், பஹ்ரைன் நாடுகளின் விமான நிலையங்களில் இருந்து கிடைக்கும் விமானத்தை பயன்படுத்தி வெளியேறலாம். சுற்றுலா, ஆன்மிகப் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள இந்தியர்கள், விமானங்கள் கிடைக்காத காரணத்தால், விசா காலத்தை கடந்தாலும் அபராதம் ஏதும் விதிக்கப்படாமல், நாட்டை விட்டு வெளியேறலாம்.

தற்போதை சூழலை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்குவதற்காக, தூதரகம் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளன.

ரியாத் தூதரகம்: +966-554412016, +966-542126784, கட்டணமில்லா எண்: 8002471234, வாட்ஸ்அப்: +966-536216082 மின்னஞ்சல்: cw.riyadh@mea.gov.in

ஜெட்டா துணைத் தூதரகம்: +966-12-2614093, +966-556122301, வாட்ஸ்அப்: +966-536209704 , மின்னஞ்சல்: pbskcgi@gmail.com

சமூக வலைதளங்கள்: எக்ஸ் (@IndianEmbRiyadh), பேஸ்புக் (Indiain Saudi Arabia), இன்ஸ்டாகிராம் (indianembriyadh) ஆகியவற்றை பயன்படுத்தி உதவி கோரலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.